மேலும் செய்திகள்
வேன் மோதி எலக்ட்ரீஷியன் பலி
21-May-2025
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே பெண்ணை திட்டி தாக்கிய கணவன், மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.சங்கராபுரம் அடுத்த வடபாலப்பட்டு காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனியன்,48; இவரது அண்ணன் அண்ணாமலை,55; இருவரது வீடும், நிலமும் அருகருகே உள்ளன. இரு குடும்பத்தினருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், முனியன் மனைவி மகாலட்சுமி,38; கடந்த 3ம் தேதி அவருடைய நிலத்தில் மக்காச்சோள பயிர்களை எலி கடிப்பதால் மருந்து போட்டார். இந்நிலையில் அண்ணாமலை மற்றும் அவரது மனைவி கலா,48; ஆகியோர் இணைந்து, மகாலட்சுமியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
21-May-2025