உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இரு தரப்பினர் மோதல் ஏழு பேர் மீது வழக்கு 

இரு தரப்பினர் மோதல் ஏழு பேர் மீது வழக்கு 

சங்கராபுரம் சங்கராபுரம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சங்கராபுரம் அடுத்த ச.செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முத்து மகன் ஏழுமலை 58.இவரது தம்பி ராதாகிருஷ்ணன் 55. அண்ணன் தம்பி இருவருக்குமிடையே நிலம் சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டு அது மோதலாக மாறியது.இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக் கொண்டனர்.இது குறித்து ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் ராதாகிருஷ்ணன், இவரது மகன்கள் பிரதாப், பிரவீன், மற்றும் தாகப்பிள்ளை ஆகியோர் மீதும், ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, இவரது மகன்கள் சிலம்பரசன், தில்லைக்கரசு ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை