| ADDED : ஜன 07, 2024 05:51 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் 522 மனுக்கள் பெறப்பட்டது.திருக்கோவிலுாரில் 7, 8, 9, 10, 11, 12, 13, 17, 18 வார்டு மக்களின் குறைகளைக் களையும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. கமிஷனர் கீதா வரவேற்றார். தனித்துணை ஆட்சியர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் உமா மகேஸ்வரி குணா முன்னிலை வகித்தனர். நகர மன்ற தலைவர் முருகன் முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.மின்துறை, வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் கோரிக்கைகள் அடங்கிய 522 மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, உடனடி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் மாரியாபிள்ளை, நகராட்சி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.