உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அயலக தமிழர் நல வாரியம் உறுப்பினர் பதிவு செய்ய கலெக்டர் அறிவுறுத்தல்

அயலக தமிழர் நல வாரியம் உறுப்பினர் பதிவு செய்ய கலெக்டர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி: அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்த தமிழர்கள், வெளிநாட்டில் பணியின்போது உயிரிழந்தால் ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;தமிழ்நாட்டிலிருந்து வேலை வாய்ப்பிற்கு வெளிநாட்டிற்கு செல்லும் தமிழர்கள் அதிகளவில் முதல் நிலை தொழிலாளர்களாக செல்கின்றனர். இவர்கள் எதிர்பாராத விதமாக வெளிநாடுகளில் இறக்கும் போது அவர்களது குடும்பத்தினர் பொருளாதார ரீதியில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.இதனையொட்டி அக்குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்காக அயலக தமிழர் நல வாரியத்தில் இதுவரை 28 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். வெளிநாடு வேலைக்கு செல்வோர், வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும். நிதி உதவி பெற உயிரிழந்த நபர் அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்திருக்க வேண்டும். உயிரிழக்கும் போது (அனைத்து வகை இறப்பு) வெளிநாட்டில் முறையான ஆவணங்களுடன் பணியில் இருந்திருக்க வேண்டும்.வெளிநாட்டில் உறுப்பினர் உயிரிழந்த 9 மாத காலத்திற்குள் குடும்பத்தினர் நேரடியாக அல்லது இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் உரிய சரிபார்ப்பிற்கு பின்பு நிதி உதவி வழங்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ