உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இறுதி கட்டத்தை எட்டிய கலெக்டர் அலுவலக பணி

இறுதி கட்டத்தை எட்டிய கலெக்டர் அலுவலக பணி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.139.41 கோடி மதிப்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுப்பட்டு வருகிறது. இப்பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்து கூறியதாவது; மாவட்டத்தின் நிர்வாக பயன்பாட்டிற்காக அனைத்து துறைகளும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில், வீரசோழபுரத்தில் 35.18 ஏக்கர் பரப்பளவில் 8 தளங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிந்து கட்டுமானபணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. டைல்ஸ் பதித்தல், வர்ணப்பூச்சு, மின்சார வசதி பணிகள் உள்ளிட்ட மீதமுள்ள பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய கலெக்டர் அலுவலகம் கூடிய விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். பணிகளை உடனடியாகவும், தரமாகவும் முடிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஆய்வின்போது பொதுப் பணித்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ