உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் சங்கராபுரத்தில் பரபரப்பு

 வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் சங்கராபுரத்தில் பரபரப்பு

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே வீட்டில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் தலைமையிலான போலீசார், சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராம காட்டுக்கொட்டகையில் வசிக்கும் ரத்தினம் மகன் அந்தோணிசேவியர், 33; என்பவரது வீட்டில் நேற்று காலை ஆய்வுக்கு சென்றனர். போலீசார் வருவதை கண்டதும், அந்தோணிசேவியர் வீட்டின் பின்பக்கம் வழியாக தப்பி ஓடி தலைமறைவானார். போலீசார் வீட்டில் நடத்திய சோதனையில், பதுக்கி வைத்திருந்த ஒற்றைக்குழல் நாட்டு துப்பாக்கி மற்றும் வெடி மருந்து, கந்தகம், உப்பு, பால்ரஸ் 4 கிலோ, கருப்பு மருந்து ஒரு கிலோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய அந்தோணிசேவியரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை