மேலும் செய்திகள்
ஊராட்சி அலுவலகங்கள் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
03-Oct-2025
உளுந்துார்பேட்டை: எலவனாசூர்கோட்டை ஊராட்சி அலுவலகம் கட்டுமான பணி துவக்க விழா நடந்தது. உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டையில் ரூ.30 லட்சம் மதிப்பில் ஊராட்சி அலுவலக கட்டுமான பணி துவக்க விழா நடந்தது. ஊராட்சி தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் ராஜவேல், பி.டி.ஓ., முருகன் முன்னிலை வகித்தனர். மணிகண்ணன் எம்.எல்.ஏ., பங்கேற்று புதிய ஊராட்சி அலுவலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இதில் ஊராட்சி துணை தலைவர் சம்சாத், ஒன்றிய கவுன்சிலர்கள் மனோகரன், சர்தார், ஊராட்சி செயலாளர் முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்ற னர்.
03-Oct-2025