உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலை ஒன்றியத்தில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வெள்ளிமலை முருகன் கோவிலில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் சக்திவேல் சிறப்புரையாற்றினார். ஹிந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வெள்ளிமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் அரசின் வழிகாட்டுதல்படி விநாயகர் சதுர்த்தி வழிபாடுகளை நடத்தியபின், வரும் 31ம் தேதி விநாயகர் சிலைகளை வெள்ளிமலை பஸ் நிலையம் அருகில் இருந்து விஜர்சன ஊர்வலமாக கொண்டு சென்று படகுத்துறையில் கரைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் விநாயகர் சிலை விஜர்சனம் செய்யும் இடங்களில் மின் விளக்கு உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வருவாய்த்துறை அலுவலர்களிடம் கோரிக்கை விடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய செயலாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி