உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.சங்கராபுரம் அடுத்த ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமுர்த்தி. இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று வயலில் மேய்ந்து கொண்டிருந்தபோது அருகில் இருந்த 40 அடி ஆழ தரை கிணற்றில் தவறி விழுந்தது.தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை