தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
உளுந்துார்பேட்டை :புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி வினா போட்டி உளுந்துார்பேட்டையில் நடந்தது.ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 16 பேர் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 சுற்றுக்களாக போட்டி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரா தலைமை தாங்கினார். போட்டியில் திலீபன், திருமலை அணி முதலிடத்தையும், ஹரிஹரன், ரித்தீஷ் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். மேலும், ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யா மந்திர் இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த போட்டிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் கலைவாணி தலைமை தாங்கினார்.போட்டியில் கீர்த்தி, அகிலேஷ் அணி முதலிடமும். நவாஸ், ஜாசிர் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.