உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு மாதிரி மகளிர் பள்ளியில் தினமலர்--பட்டம் இதழ் வழங்கல்

அரசு மாதிரி மகளிர் பள்ளியில் தினமலர்--பட்டம் இதழ் வழங்கல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில் 'தினமலர்--பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக, திங்கள் முதல் வெள்ளி வரை தினமலர் பட்டம் இதழ் வெளியாகிறது. இந்த இதழில் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு, அறிவியல் கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அரசின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், விரிவான தகவல்கள் இடம்பெறுகிறது. கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கள்ளக்குறிச்சி மையா அறக்கட்டளை நிறுவனர் குமார், இணை நிறுவனர் கிருத்திகா ஒச்சாயிட், பெங்களூரு குளோபல் பின்சர்வ் நிறுவன இயக்குனர் ஸ்ரீதேவி ஜெகன்நாத், சேலம் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், பெங்களூரு டிலோயிட் மென்பொருள் நிறுவன மேலாளர் சுஜனிதா பிரகாஷ் ஆகியோர் பங்களிப்புடன் தினமும் 50 'தினமலர்-பட்டம்' இதழ் மாணவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்தனர். அதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை கீதா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை வசந்தா முன்னிலை வகித்தார். பொறுப்பு ஆசிரியை தேவிமயில் கலந்துகொண்டு தினமலர் பட்டம் இதழை தினமும் படித்து, பொது அறிவு விபரங்களை தெரிந்து கொண்டு மேன்மை பெற வேண்டும் என அறிவுறுத்தினார். பள்ளி உதவி தலைமை ஆசிரியை சுபா, ஆசிரியை செல்வ லட்சுமி, நுாலகர் கலைவாணி ஆகியோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை