/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க சேலம் சென்ற மாற்றுத்திறனாளிகள்
வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க சேலம் சென்ற மாற்றுத்திறனாளிகள்
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சேலத்தில் நடக்கும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.சேலம் மாவட்டத்தில் மண்டல அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இதில் பங்கேற்க பதிவு செய்திருந்த 54 மாற்றுத் திறனாளிகள், கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி தலைமையில் வேன் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன், செயல்திறன் உதவியாளர் முனுசாமி உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்