மேலும் செய்திகள்
அன்புமணி பிறந்த நாள் பா.ம.க., கொண்டாட்டம்
10-Oct-2024
கள்ளக்குறிச்சி: வடக்கனந்தலில் பா.ம.க., தலைவர் அன்புமணி பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி அடுத்த வடக்கனந்தலில் நடந்த நிகழ்ச்சிக்கு பா.ம.க., நகர செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். பா.ம.க., கட்சி தலைவர் அன்புமணி, 56; வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளர் தமிழரசன் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினர் சின்னகரை, ஒன்றிய செயலாளர் அய்யப்பன், நகர இளைஞரணி செயலாளர்கள் கார்த்தி, சிலம்பு, ராமசாமி, நகர தலைவர் சந்திரமோகன், மாவட்ட பொருளாளர் ரத்தினகுமாரி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் பா.ம.க., கட்சி கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
10-Oct-2024