| ADDED : பிப் 01, 2024 06:32 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் அரசு பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கான மாவட்ட மாநாடு நடந்தது.கள்ளக்குறிச்சியில் நடந்த மாவட்ட மாநாட்டிற்கு டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். சி.இ.ஓ., முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆரோக்கியசாமி, ஜோதிமணி, துரைராஜ் ஆகியோர் பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் குறித்தும், முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பள்ளிகளின் குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்யுமாறும் அறிவுறுத்தினர்.தொடர்ந்து, மேலாண்மை குழு சிறப்பு செயல்பாடுகள் குறித்து தலைவர்களால் விவாதிக்கப்பட்டது. மேலும், பள்ளி மேலாண்மை குழுவில் சிறப்பாக செயல்பட்ட 18 அரசு பள்ளிகளுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மாநில திட்ட இயக்கத்தில் இருந்து வருகை புரிந்த ஷியாம்சுந்தர் குழந்தைகளின் உரிமைகள், பள்ளி மேலாண்மை குழு எவ்வாறு பள்ளி வளர்ச்சிக்கு தன்னை இணைத்துகொள்ள முடியும் என்று பேசினார்.நிகழ்ச்சியில் பள்ளி கல்வி துணை ஆய்வாளர் வேல்முருகன், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.