மேலும் செய்திகள்
மூங்கில்துறைப்பட்டில் ஆயுதம் ஏந்திய போட்டி
02-Oct-2025
மூங்கில்துறைப்பட்டு: அக் 30-: மூங்கில்துறைப்பட்டில் ந டந்த மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில், வீரம் விளையாட்டு அறக்கட்டளை மாணவர்கள் 11 பேர் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகினர். தென்னிந்தியா பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் சங்கராபுரத்தில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில், வீரம் விளையாட்டு அறக்கட்டளை மாணவர்கள் 20 பேர் பங்கேற்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வீரம் விளையாட்டு அறக்கட்டளை மாணவர்கள் 11 பேர் முதலிடம் பெற்று மாநில அளவில் நடைபெறும் சிலம்பு போட்டிக்கு தகுதி பெற்றனர். மாநில அளவிலான போட்டி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. மாவட்ட அளவிலான போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. பயி ற்சியாளர்கள் ஜான்வின்சென்ட், விக்கி ஆகியோர் உடன் இருந்தனர்.
02-Oct-2025