| ADDED : ஜன 31, 2024 02:14 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வந்த பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலைக்கு, மாவட்ட செயலாளர் ஹரி புத்தர் சிலையை பரிசாக வழங்கினார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், ரிஷிவந்தியம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 3 சட்டசபை தொகுதியில் பா.ஜ., சார்பில் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிகழ்ச்சி நடந்தது.இதில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று, நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அதில், கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு வருகை புரிந்த அவருக்கு பா.ஜ., மாவட்ட செயலாளர் ஹரி, அவரது தந்தை முத்துசாமி மற்றும் குடும்பத்தினர் மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்து, புத்தர் சிலையினை அன்பளிப்பாக வழங்கினர்.