உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தி.மு.க., கொடி கம்பம் அகற்றம்

தி.மு.க., கொடி கம்பம் அகற்றம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் இருந்த கொடிக்கம்பத்தை தி.மு.க., நிர்வாகிகள் அகற்றினர்.சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவையடுத்து, கிளை நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் தங்கள் பகுதியில் பொது இடங்களில் வைத்துள்ள கொடி கம்பங்களை, தாங்களே முன்வந்து, 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என, தி.மு.க., பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார். இதனையடுத்து, நேற்று திருக்கோவிலுார் பஸ் நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த தி.மு.க., கொடிக்கம்பத்தை நகர மன்ற சேர்மன் முருகன், நகர அவை தலைவர் குணா உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் அக்கட்சியினர் அகற்றினர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' தலைமையின் உத்தரவை நிறைவேற்ற, தி.மு.க., வினர் கொடி கம்பத்தை அகற்றியது முன் உதாரணமாக அமைந்துள்ளது. இதேபகுதியில் வைக்கப்பட்டிருந்த மக்கள் நீதி மைய கட்சியின் கொடிக்கம்பம், சில தினங்களுக்கு முன் சாய்ந்ததில், பெண் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். இதை கருத்தில் கொண்டு மற்ற கட்சி கொடிக்கம்பங்களையும் சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் அகற்ற முன் வர வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ