உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கல்வி உபகரணம் : தி.மு.க., வழங்கல்

 கல்வி உபகரணம் : தி.மு.க., வழங்கல்

கள்ளக்குறிச்சி: தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்தநாளையொட்டி மேல்நாரியப்பனுார் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது. சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் அங்கன்வாடி மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். அவைத் தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் சுதா மணிகண்டன் வரவேற்றார். அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு தட்டு, டம்ளர், கப், பேனா, பென்சில், நோட்டு உள்ளிட்ட கல்வி உபகரண பொருட்கள் மற்றும் கேக் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க., கிளைச் செயலாளர்கள் வரதன், முருகன், பெரியசாமி, சின்னதுரை, ராமலிங்கம், முனியன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சோலைமுத்து, கண்ரோஸ், இளைஞரணி துணை அமைப்பாளர் மணிபாரதி உட்பட பலர் பங்கேற்றனர். சின்னசேலம் ஒன்றியத்திற்குட்பட்ட அம்மையகரம், தாகம்தீர்த்தாபுரம், கனியாமூர் உட்பட பல்வேறு கிராமங்களில் அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி