மேலும் செய்திகள்
செங்கையில் வரும் 24ல் வேலைவாய்ப்பு முகாம்
22-Jan-2025
கள்ளக்குறிச்சி; சங்கராபுரத்தில் வரும் 23 ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் சங்கராபுரம் அடுத்த மயிலாம்பாறை செயின்ட் ஜோசப் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், வரும் 23ம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கிறது.தொழில் துறை, சேவைத் துறை, விற்பனை துறை சார்ந்த 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது.மாவட்டத்தில் 8 மற்றும் 10ம் வகுப்பு (தேர்ச்சி, தோல்வி) முதல் பட்டபடிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, அக்ரி, செவிலியர், ஆசிரியர் தகுதி, ஓட்டல் மேனேஜ்மென்ட், பி.இ., பட்டபடிப்பு முடித்த 18-40 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்போர் பயோ டேட்டா, அனைத்து கல்வி சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 8807204332, 04151-295422 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
22-Jan-2025