உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுார் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா

திருக்கோவிலுார் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் கல்லுாரியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது.திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் நாராயணசாமி வரவேற்றார். கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி, விழாவினை துவக்கி வைத்தார். செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுப்பிரமணியன், தாளாளர் பழனிராஜ், துணைத் தலைவர் முஸ்டாக் அகமது மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், கோல போட்டிகள் நடந்தது. பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் கல்லுாரி மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர். துணை முதல்வர் மீனாட்சி, நிர்வாக அலுவலர் குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை