மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
18-Jul-2025
மருத்துவ முகாம்
04-Jul-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம் நாளை நடக்கிறது. கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவக்கல்லுாரியில் வாரம் தோறும் வியாழக்கிழமை செயல்பட்டு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் இனி சனிக்கிழமைகளில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமுடன் இணைத்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாளை (2ம் தேதி) கள்ளக்குறிச்சி, நேப்பால் தெரு, அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று பரிசோதனை செய்து அடையாள அட்டை பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
18-Jul-2025
04-Jul-2025