உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சம்பா பயிர் காப்பீடு செய்ய 30ம் தேதி வரை நீட்டிப்பு

சம்பா பயிர் காப்பீடு செய்ய 30ம் தேதி வரை நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி: சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்து கொள்ள வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு:விவசாயிகள் நடப்பாண்டு 2024-25க்கான சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட தொடர் முயற்சியால் சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை வரும் 30 ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.எனவே இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் வரும் 30ம் தேதிக்குள் ஏக்கருக்கு 511 ரூபாய் பிரீமிய தொகையுடன் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ