உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போலீஸ்காரர் எனக்கூறி விவசாயியிடம் பணம் பறிப்பு

போலீஸ்காரர் எனக்கூறி விவசாயியிடம் பணம் பறிப்பு

சின்னசேலம் : சின்னசேலம் அருகே விவசாயியிடம், போலீஸ் என கூறி பணம் பறித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.சின்னசேலம் அடுத்த ராயப்பனுாரைச் சேர்ந்தவர் செங்கோட்டையன், 64; விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணி அளவில் தனக்கு சொந்தமான மாட்டை விற்றுவிட்டு 40 ஆயிரம் பணத்துடன் பைக்கில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.வீ.கூட்ரோடு மேம்பாலம் அருகே பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர், செங்கோட்டையனை வழிமறித்து, தான் போலீஸ் என கூறி, கஞ்சா கடத்துவதாக தகவல் வந்ததாகவும் அதனால் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி அவரை சோதனை செய்துள்ளார். அப்போது செங்கோட்டையன் பாக்கெட்டில் வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு மேம்பாலத்தின் கீழ் போலீஸ் அதிகாரிகள் இருப்பதாகவும் அங்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளும்படி கூறிவிட்டு தப்பி சென்றார்.இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ