உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மின் கசிவால் தீ விபத்து கூரை வீடு சேதம்

மின் கசிவால் தீ விபத்து கூரை வீடு சேதம்

கள்ளக்குறிச்சி : தண்டலை கிராமத்தில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மனைவி ஜோதி, 35; இவரது கூரை வீடு நேற்று மதியம் 2.30 மணிக்கு, தீ பிடித்து எரிய துவங்கியது. உடன் அருகிலிருந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.தீ விபத்தில், வீட்டிலிருந்த துணிகள், பாத்திரங்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் கருகி சேதமடைந்தது. மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை