உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில்... மீன் அங்காடி; நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில்... மீன் அங்காடி; நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பஸ் நிலைய வளாகத்தில், மீன்கள் விற்பனைக்காக ரூ.15 லட்சம் மதிப்பில் 16 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், சிவன் கோவில், பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட 5 கோவில்கள் உள்ளன. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள், மார்க்கெட்டிற்கு செல்லும் பொதுமக்கள் என எப்போது பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாக மந்தைவெளி விளங்குகிறது.கள்ளக்குறிச்சியில் மீன் மார்க்கெட்டிற்கு என்று தனி இடம் கிடையாது. இதனால், மந்தைவெளி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு பின்புறத்தில் தனியார் வாடகை கட்டடத்தில் கடைகள் மீன் மார்க்கெட்டாக இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளிலிருந்து கடல் மீன்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. மீன்களை அங்கேயே வெட்டி சுத்தம் செய்து விற்பனை செய்கின்றனர். சாலையோரம் உள்ள கழிவு நீர் வாய்க்கால் மற்றும் குப்பையில் மீன் கழிகளை கொட்டுகின்றனர். அதேபோல் இரவில் வாகனங்களில் வரும் மீன்கள் அனைத்தும் மந்தைவெளி பகுதியில் வியாபாரிகள் பிரித்து எடுத்து செல்கின்றனர். இதனால், காலை நேரங்களில் அப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். இந்நிலையில் கோவில்கள் மற்றும் குடியிருப்புக்களுக்கு மத்தியில் தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கும் மீன் இறைச்சி கடைகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்காளக கோரிக்கை விடுத்து வந்தனர். கடைகளை அகற்றகோரி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் வலது புறத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அருகே காலியாக இருந்த இடத்தில் நகராட்சி சார்பில் மீன் இறைச்சிக்கு மட்டும் தனி மீன் அங்காடி அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதையடுத்து, ரூ.15 லட்சம் மதிப்பில் 16 கடைகள் கட்டி, அனைத்து கடைகளுக்கும் மின் விளக்கு மற்றும் பைப் லைன் மூலம் தண்ணீர் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. கடைகள் நகராட்சி மூலம் பொது ஏலத்தின் மூலம் வாடகைக்கு விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே மந்தைவெளி பகுதியில் தனியார் வாடகை கட்டடத்தில் உள்ள மீன் கடைகள் முழுவதையும் அகற்றி, பஸ் நிலைய வளாகத்தில் புதியதாக கட்டியுள்ள நகராட்சி கடைகளில் இயங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை