மேலும் செய்திகள்
பைக் மோதல்: ஊழியர் பலி
10-Apr-2025
இளம்பெண் மாயம்
24-Mar-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சக்தி, 55; இவரது மகன் வீரமணி, 22; இவர் சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல முயற்சி செய்தார். இது தொடர்பாக, கடலுார் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரியிடம், ரூ.5 லட்சம் பணம் கொடுத்தார். ஆனால் பல மாதங்களுக்கு பிறகும் அவர் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இதுதொடர்பாக, இருவரிடமும் பணத்தை திருப்பி கேட்ட போது கொடுக்கவில்லை. இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் தம்பதி மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
10-Apr-2025
24-Mar-2025