மேலும் செய்திகள்
பூச்சிக்கொல்லி மருந்து குடித்து சிறுவன் பலி
23-May-2025
சின்னசேலம்: சின்னசேலம் அருகே நடந்த விபத்தில் முன்னாள் வேளாண் கல்லுாரி இயக்குனர் உயிரிழந்தார். சின்னசேலம் அடுத்த ஈரியூர், தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி மகன் சுப்ரமணியன், 61; கோவை வேளாண் கல்லுாரியில் இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு, விருதாச்சலம் - வி.கூட்ரோடு தேசிய நெடுஞ்சாலையில், பெத்தாசமுத்திரம் பழத்தோட்டம் அருகே சென்ற போது அவரது கார் சாலையோர மரத்தில் மோதியது. படுகாயம் அடைந்தவர் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இறந்து விட்டதாக பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர். கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
23-May-2025