மேலும் செய்திகள்
இலவச கண் சிகிச்சை முகாம்
04-Nov-2024
சங்கராபுரம் ; சங்கராபுத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. சங்கராபுரம் ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவமனை, நியூ பவர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.ரோட்டரி தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் சங்கர் வரவேற்றார்.முன்னாள் துணை ஆளுனர் முத்துக்கருப்பன், ரோட்டரி டிரஸ்ட் சேர்மன் ஜெனார்தனன். நியூ பவர் பள்ளி தாளாளர் மணிவண்ணன்,நிர்வாகி துரை, முன்னாள் தலைவர்கள் சுதாகர், சீனுவாசன்,நடராஜன் முன்னிலை வகித்தனர்.உதயசூரியன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.முகாமில் 350 பேர் கண்கள் பரிசோதனை செய்துகொண்டனர். 175 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக கோவை அழைத்துச் செல்லப்பட்டனர்.
04-Nov-2024