மேலும் செய்திகள்
தேனி கஞ்சா வியாபாரிகள் 4 பேருக்கு குண்டாஸ்
27-May-2025
கள்ளக்குறிச்சி : தியாகதுருகம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.தியாகதுருகம் அடுத்த புக்குளத்தை சேர்ந்தவர் இளங்கோ மகன் பரத், 21; இவர், கடந்த மே 29ம் தேதி தியாகதுருகம் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த போது, கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பரத் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் எஸ்.பி., ரஜத்சதுர்வேதி பரிந்துரையில் அவரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். இதையடுத்து, கடலுார் மத்திய சிறையில் உள்ள பரத்திடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
27-May-2025