மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டத்தில் நலத்தி்ட்ட உதவி வழங்கல்
17-Dec-2024
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொது விநியோத்திட்டம் மற்றும் காஸ் முகவர்களுடனான எரிவாயு குறைதீர் கூட்டத்திற்கு டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் தலைமையில் நடந்தது.வட்ட வழங்கல் அலுவலர் சுப்ரமணியன், தனி தாசில்தார்கள் பிரபாகரன், சிலம்பரசன் முன்னிலை வகித்தனர். தாசில்தார் அனந்தசயனன் வரவேற்றார்.கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பதற்காக ஒரு லிட்., பெட்ரோலை பாட்டில்களில் வழங்க வேண்டும்.காஸ் ஏஜென்சி பயனாளிகளுக்கு சிலிண்டர் விபத்தினால் வழங்கப்படும் இழப்பீடுகள் குறித்து கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாதம் ஒருமுறை அனைத்து பெட்ரோல் பங்க்குகளில் வழங்கப்படும் பெட்ரோலின் தரம் மற்றும் அளவு குறித்து நுகர்வோர் சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் ஆய்வு நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.கூட்டத்தில், தொழிலாளர் ஆய்வாளர் சிவக்குமார், நுகர்வோர் விழிப்புணர்வு சங்க நிர்வாகிகள் அருண்கென்னடி, சுப்ரமணியன், மணி, மணி எழிலன், துரைசாமி, சம்பத், ஆறுமுகம் மற்றும் சிலிண்டர் ஏஜன்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
17-Dec-2024