| ADDED : நவ 18, 2025 07:19 AM
கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 10ம் தேதி சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பெயர் தெரியாத 2 பேர் சிறுமியை துாக்கி சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இது குறித்து வெளியில் தெரிவித்தால் தாய், தந்தையை கொன்று விடுவோம் என சிறுமியை மிரட்டி, அங்கிருந்து சென்றுள்ளனர். அச்சமடைந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து பெற்றோர்களிடம் தெரிவிக்காமல், வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். தகவலறிந்த சிறுமியின் தந்தை இது தொடர்பாக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கள்ளக்குறிச்சி எஸ்.பி., மாதவன் நேற்று காலை சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, பாலியல் தொந்தரவு அளித்த நபர்களை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார், சந்தேகத்தின் பேரில் சிலரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.