உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  தாயுமானவர் திட்டத்தின் கீழ் நாளை பொருட்கள் விநியோகம்

 தாயுமானவர் திட்டத்தின் கீழ் நாளை பொருட்கள் விநியோகம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப ரேஷன் கார்டுதாரர்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப ரேஷன் கார்டு தாரர்களுக்கு வீட்டிற்கு நேரடியாக சென்று பொது விநியோக திட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த 28,350 பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்படி, நாளை 4ம் தேதி மற்றும் நாளை மறுநாள் 5ம் தேதி பொது விநியோக திட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளன. எனவே, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி, பொது விநியோக திட்ட பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ