உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க மாநில செயலாளர் அப்பாதுரை தலைமை தாங்கினார்.இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சிறப்பு கால வரை ஊதியம் பெறும் அனைத்து பணியாளர்களுக்கும், தினக்கூலி பணியாளர்களுக்கும் நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மாநில பிரசார செயலாளர் அதிதேவி, ஒன்றிய தலைவர் அமிர்தலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை