உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்வராயன்மலை விவசாயிகள் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை அரசு செயலாளர் தகவல்

கல்வராயன்மலை விவசாயிகள் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை அரசு செயலாளர் தகவல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், கல்வராயன்மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமிபிரியா, கல்வராயன்மலையில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழு மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கலந்துரையாடினார். அதில், கல்வராயன்மலையில் வேளாண் உற்பத்தியை பெருக்கும் வகையில் மரவள்ளி சாகுபடியில் புதிய ரகங்களை அறிமுகப்படுத்த வேண்டும், உற்பத்தியை பெருக்குதல், செலவை குறைக்க நவீன வேளாண் கருவிகளை பயன்படுத்துதல், உற்பத்தி பொருட்களை நல்ல விலைக்கு சந்தைப்படுத்துதல், தென்னை உற்பத்தி, நெல், மிளகு மற்றும் காபி உட்பட பல்வேறு வேளாண் உற்பத்தி பயிர் சாகுபடி குறித்து விஞ்ஞானிகள் குழுவினர் விளக்கமாக தெரிவித்தனர்.தொடர்ந்து, அரசு செயலாளர் லட்சுமிபிரியா கூறியதாவது: நவீன வேளாண் தொழில் நுட்பம், வேளாண் பயிர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், உற்பத்தியை அதிகரிக்க பயிற்சியுடன் கூடிய செயல் விளக்கம் வழங்க வேண்டும், பருவத்திற்கேற்ற பயிர்களை பயிரிட செய்வதுடன், பரிசோதனை செய்து மண் வளத்திற்கேற்ற வேளாண் சாகுபடி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். கள ஆய்வின் மூலம் விஞ்ஞானிகள் குழு சேகரித்த தரவுகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான முன்மொழிவு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் கல்வராயன்மலை பகுதி பழங்குடியின மக்களின் வாழக்கை தரம் மேம்படும். இவ்வாறு அரசு செயலாளர் லட்சுமிபிரியா தெரிவித்தார்.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், பழங்குடியினர் நல அலுவலர் சுந்தரம், விஞ்ஞானிகள் குழு உறுப்பினர்கள் சேதுராமன் சிவக்குமார், ஜோசப் ராஜ்குமார், செல்லப்பெருமாள், ஜெயக்குமார், செந்தில்குமார், கலை சேகர், ரூபா நந்தினி, ரமேஷ் குமார், செல்வ முத்துக்குமரன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை