உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குரூப் 2 தேர்வு: 272 பேர் பங்கேற்பு

குரூப் 2 தேர்வு: 272 பேர் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த குரூப் 2, மற்றும் 2 ஏ, பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வில் 272 பேர் பங்கேற்றனர். கள்ளக்குறிச்சி, அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், டி.என்.பி.எஸ்.சி., மூலம் குரூப் 2 மற்றும் 2 ஏ பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வு நேற்று நடந்தது. தேர்வில் 4 பேர் கொண்ட சுற்றுக்குழு அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இந்த தேர்வுக்கு 277 பேர் விண்ணப்பித்தனர். இதில், 272 பேர் பங்கேற்ற நிலையில், 5 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வை கலெக்டர் பிரசாந்த் நேரில் ஆய்வு செய்தார். தேர்வு நிகழ்வுகள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !