உள்ளூர் செய்திகள்

குட்கா விற்றவர் கைது

கள்ளக்குறிச்சி; வரஞ்சரம் அருகே குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விருகாவூரைச் சேர்ந்த இஸ்மாயில் சையத் மகன் ஜலில், 53; என்பவர், குட்கா பொருட்களை விற்றது தெரிந்தது. இதையடுத்து ஜலில் மற்றும் காட்டுஎடையாரைச் சேர்ந்த அன்பழகன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து, ஜலிலை கைது செய்தனர்.அவரிடமிருந்து 13 ஆயிரத்து 582 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை