உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நலம் காக்கும் திட்ட முகாம் ஒன்றிய சேர்மன் ஆய்வு 

நலம் காக்கும் திட்ட முகாம் ஒன்றிய சேர்மன் ஆய்வு 

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமினை ஒன்றிய சேர்மன் ஆய்வு செய்தார். சின்னசேலம் லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாமினை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். பொது மருத்துவம், இருதய நோய், எலும்பு மற்றும் நரம்பியல் உள்ளிட்ட 17 வகையான நோய்களுக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கொண்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமினை, சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி ஆய்வு செய்தார். அட்மா குழு தலைவர் கனகராஜ், வட்டார மருத்துவ அலுவலர் மகாலிங்கம், முன்னாள் தி.மு.க., நகர செயலாளர் அயரா செந்தில்குமார், ஒன்றிய துணை செயலாளர் தெய்வானை, மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட தலைவர் குமரேசன், ஊராட்சி தலைவர் முருகேசன், நிர்வாகி பாலன், பெரியசாமி, துரைசாமி, ஜெயசீலன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !