மேலும் செய்திகள்
கொல்லம்பாளையத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்
20-Sep-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும், இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் வெயில் காய்ந்த நிலையில், திடீரென பகல் 1:00 மணிக்கு திடீரென மழை பெய்தது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் நான்கு முனை சந்திப்பு, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில், கச்சிராயபாளையம் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் சாலை, சுந்தர விநயாகர் கோவில் சாலை பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் வழிந்தோடியது.
20-Sep-2025