மேலும் செய்திகள்
பைக்கில் தவறி விழுந்த பெண் பரிதாப பலி
05-Oct-2025
அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
08-Sep-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கோர்ட் முன்பு, மனைவியை ஓட ஓட அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காந்தி நகரை சேர்ந்தவர் அய்யனார், 32; மூட்டை துாக்கும் தொழிலாளி. இவரது மனைவி கமலி, 27; திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், மனைவியிடம், அய்யனார் அடிக்கடி பணம் கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த கமலி, நேற்று கள்ளக்குறிச்சி மகளிர் போலீசில் கணவர் அய்யனார் மீது புகார் செய்துவிட்டு, கருணாபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அவரை, பின்தொடர்ந்து சென்ற அய்யனார், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் நுழைவு வாயில் முன்பு மனைவி கமலியை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியுள்ளார். கமலி தடுத்தபோது, அவரது கை மற்றும் தோள் பட்டையில் வெட்டு விழுந்தது. இதனால், ரத்தம் சொட்ட சொட்ட கமலி கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடினார். அய்யனார் துரத்தி சென்ற நிலையில், அங்கிருந்த கோர்ட் போலீசார் அரிவாளுடன் அய்யனாரை மடக்கி பிடித்தனர். பலத்த காயமடைந்த கமலியை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, அய்யனாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அய்யனார் மீது ஏற்கனவே கொலை வழக்கு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கள்ளக்குறிச்சி கோர்ட் முன்பு நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
05-Oct-2025
08-Sep-2025