உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் விஷம் அருந்தி தற்கொலை

குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் விஷம் அருந்தி தற்கொலை

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் பூச்சு மருந்து குடித்து கணவன் தற்கொலை செய்து கொண்டார்.சின்னசேலம் அடுத்த நாககுப்பம் சேர்ந்த கிருஷ்ணன் மகன் வெங்கடேசன்,37; இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனை அவரது மனைவி பூங்கொடி பலமுறை கண்டித்துள்ளார். நேற்று காலை 10.45 மணிக்கு மது குடித்து விட்டு வந்த வெங்கடேசனை அவரது மனைவி கண்டித்ததால், பூச்சு மருந்து குடித்து புக்கிரவாரியில் விவசாய நிலத்தில் கிடந்துள்ளார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர், வெங்கடேசனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை