மேலும் செய்திகள்
மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
28-Feb-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் நடந்த மருத்துவ முகாமில், 78 மாற்றுத்திறனாளிகளுக்கு, தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார்.அரசு எலும்பு முறிவு டாக்டர் மோகன்ராஜ், காது, மூக்கு, தொண்டை டாக்டர் வாசவி, மனநல டாக்டர் சிலம்பரசன், கண் டாக்டர் காயத்ரி, முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர், 100 மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். அதில் தகுதிவாய்ந்த 78 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
28-Feb-2025