மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணி கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கலெக்டர் அலுவலகக் கட்டட கட்டுமானப் பணி, பிரிதிவிமங்கலத்தில் ரூ.6.98 கோடி மதிப்பிலான பொதுப்பணித்துறை பயணியர் ஆய்வு மாளிகை, சித்தலுார் கிராமத்தில் நபார்டு திட்டத்தில் ரூ.7.65 கோடி மதிப்பிலான உயர்மட்ட பாலம் ஆகிய பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரான நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் மதுசூதனன் ரெட்டி ஆய்வு செய்தார்.ஆய்வில் திட்டப் பணிகளை தினசரி அடிப்படையில் கண்காணித்து, அளவுகளின் படி பணிகள் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். கட்டுமானப் பொருட்களின் தரத்தினையும், முடிவுற்ற பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் சமச்சீர் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு அரசின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.முன்னதாக நில அளவை உதவி இயக்குநர் அலுவலகத்தினை ஆய்வு செய்தார். ஆய்வின்போது, டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.