உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆதார், குடும்ப அட்டை எண் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

ஆதார், குடும்ப அட்டை எண் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி : கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்கள் ஆதார் மற்றும் குடும்ப அட்டை எண்ணை ஒரு வாரத்திற்குள் சங்கத்தில் சமர்ப்பிக்குமாறு கடலுார் வீட்டு வசதி மண்டல துணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.கடலுார் மண்டல கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் துணைப்பதிவாளர் சிவராஜ் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் உறுப்பினர்கள் சிலர், தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் உள்ளிட்ட விபரங்களை வழங்காமல் உள்ளனர்.இதனால் விதிமுறைப்படி கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு தேர்தலில் ஓட்டளிக்கவும், போட்டியிடவும் முடியாத நிலை உள்ளது.எனவே, சங்க உறுப்பினர்கள் ஒரு வாரத்திற்குள் தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் உள்ளிட்ட விபரங்களை, தங்களது கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை