உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கூட்டுறவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு

 கூட்டுறவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கூட்டுறவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் 36 உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 10 உதவியாளர் பணியிடங்கள் என மொத்தமாக 46 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இப்பணியிடங்களுக்கு 813 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் உரிய கல்வி தகுதி இல்லாதது உட்பட 61 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, மீதமுள்ள 752 நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. தொடர்ந்து, கடந்த அக்டோபர் 12ம் தேதி எழுத்துத்தேர்வு நடந்தது. இதில், 605 நபர்கள் தேர்வெழுதினர். 147 பேர் தேர்வெழுதவில்லை. தேர்வு முடிவுகள் கடந்த 18ம் தேதி வெளியானது. இதில் தேர்ச்சி பெற்ற 96 நபர்களுக்கு நேர்முகத்தேர்வு நேற்று நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமையில், துணைப்பதிவாளர் விஜயகுமாரி மேற்பார்வையில் துணைப்பதிவாளர்கள் ரகு, சாந்தி, கண்காணிப்பாளர் சசிகலா ஆகியோர் கொண்ட குழுவினர் ஒவ்வொரு நபர்களையும் தனி, தனியாக அழைத்து நேர்க்காணல் நடத்தினர். தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, கூட்டுறவு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ