உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோவிலில் இரும்பு, மர பொருட்கள் அபேஸ் ; அறநிலையத்துறை செயல் அலுவலர் மீது புகார்

கோவிலில் இரும்பு, மர பொருட்கள் அபேஸ் ; அறநிலையத்துறை செயல் அலுவலர் மீது புகார்

உளுந்துார்பேட்டை; திருநாவலுார் கோவிலில் இருந்த பழைய இரும்பு, மர பொருட்களை திருடி சென்றதாக கூறி டிராக்டரை கிராம மக்கள் சிறை பிடித்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் ஸ்ரீ பக்த ஜனேஸ்வரர் கோவிலில் கடந்த 21ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் புனரமைப்பின்போது இரும்பு, மர பொருட்களை கோவிலில் ஒரு அறையில் வைத்திருந்தனர்.இந்த பொருட்களை, நேற்று காலை 6:00 மணியளவில் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் டிராக்டரில் ஏற்றி சென்று பு. மாம்பாக்கம் அருகே உள்ள பழைய இரும்புக்கடையில் போட்டுள்ளனர்.தொடர்ந்து இரண்டாவது முறையாக பொருட்களை டிராக்டரில் ஏற்றி கொண்டிருந்தனர்.இதையறிந்த அப்பகுதி மக்கள் நண்பகர் 12:00 மணியளவில் திரண்டு, பொருட்களை எங்கே எடுத்துச் செல்கிறீர்கள் என கேட்டு டிராக்டரை சிறைபிடித்தனர்.கோவிலில் இருந்த பழைய இரும்பு, மர பொருட்களை எடுத்துச் சென்றது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் லோகேஷ், டிராக்டர் உரிமையாளர் அய்யப்பன் ஆகியோர் மீது திருநாவலுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை