உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆபீஸ் இன்று திறப்பு

 கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆபீஸ் இன்று திறப்பு

கள்ளக்குறிச்சி: முதல்வர் ஸ்டாலின், இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் செல்கிறார். அங்கு, 139 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகம் உட்பட 1,773 கோடி மதிப்பிலான, திட்ட பணிகளை திறந்து வைக்கிறார். மேலும், 62 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இவ்விழாவில், 2.16 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து, 27ம் தேதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நடக்கும் அரசு விழாவில், 2,095 கோடி ரூபாய் மதிப்பிலான, 314 திட்ட பணிகளை, முதல்வர் துவக்கி வைக்க உள்ளார். மேலும், 46 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். விழாவில், 2.66 லட்சம் பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை