உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

 அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில், 1,500 ஆண்டுகள் பழமையான முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில், 66 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, நவ., 23ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து, நேற்று காலை 9:30 மணிக்கு, பக்தர்களின் அரோகரா கோஷத்திற்கு மத்தியில், கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், கலெக்டர் பிரஷாந்த், எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேக, ஆராதனையுடன், மகா தீபாராதனை நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இன்று முதல், மண்டலாபிஷேக பூஜை துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை