மேலும் செய்திகள்
பைக்கில் மது பாட்டில் கடத்தியவர் கைது
15-May-2025
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே மது பாட்டில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அடுத்த ஆருர் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அங்குள்ள ஏரிக்கரையில் அதே ஊரை சேர்ந்த பாண்டியன் மகன் சத்யராஜ், 30; மது பாட்டில்களை விற்பனைக்காக, பைக்கில் கடத்தி வந்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து, 14 குவாட்டர் பிராந்தி பாட்டில்கள், பைக், 300 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
15-May-2025