உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குறு, சிறு நடுத்தர தொழில்களுக்கு நாளை கள்ளக்குறிச்சியில் லோன் மேளா

குறு, சிறு நடுத்தர தொழில்களுக்கு நாளை கள்ளக்குறிச்சியில் லோன் மேளா

கள்ளக்குறிச்சி : குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நாளை (23ம் தேதி) லோன் மேளா நடக்கிறது. இது குறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஊரக பகுதிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 2023-24ம் ஆண்டில் ரூ.869.19 கோடி கடன் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனையொட்டி மாவட்ட தொழில் மையம் சார்பில் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த லோன் மேளாவில் 2,568 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.113.22 கோடி கடன் வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு டிச.,31ம் தேதி வரையிலான நிதியாண்டில் ரூ.508.74 கோடி அளவில் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நாளை(23 ம் தேதி) மாலை 3 மணியளவில் லோன் மேளா கூட்டம் நடக்கிறது. இதில் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது கட்டுமின்றி, கடன் வகைகள், கடன் மற்றும் மானியத் திட்டங்கள், அவற்றை பெறும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.மேலும், கடன் கோரும் விண்ணப்பங்களை பதிவு செய்யவும் பரிசீலிக்கவும் வழிவகை செய்யப்படும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் பங்கேற்று முறையான தகவல் பெறலாம். மேலும் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி ராஜா நகரில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரடியாகவோ அல்லது 04151-294057 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தொழில் முனைவோர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை