உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே லாரியில் 4 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி சென்ற லாரியை போலீசார் பறிமுதல் செய்து உரிமையாளரை கைது செய்தனர். உளுந்துார்பேட்டை அடுத்த எறஞ்சி தேசிய நெடுஞ்சாலை லாரிகள் நிறுத்தம் அருகே டி.எஸ்.பி., அசோகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகம்படியாக சென்ற டி.என்.48. ஜே. 7570 பதிவெண் கொண்ட லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், 4 யூனிட் ஊழாங்கற்களை தஞ்சாவூர் பகுதிக்கு கடத்தி சென்றது தெரிந்தது. தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து எடைக்கல் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக எடைக்கல் போலீசார் லாரி உரிமையாளர் கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்து புதுப்பேட்டை சேர்ந்த கோவிந்தன் மகன் அஜித்குமார், 29; என்பர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை